Grab the widget  IWeb Gator

Thursday, November 10, 2011

-

வெளிநாட்டுக் கல்வியை சாத்தியமாக்கும் கல்வி உதவித்தொகைகள்


வெளிநாட்டில் உயர்கல்வி பயில ஆசையும், தகுதியும் இருந்த போதும் பொருளாதார வசதி சிலருக்கு போதுமானதாக இருக்காது. அவர்களுக்கு பல்வேறு உதவித் தொகைகள் கைகொடுக்கின்றன. சில உதவித்தொகைகள் கூடுதலாக நம்மிடம் இருந்து பணத்தைச் செலவு செய்ய வேண்டிய தேவை இன்றி, மாணவரின் அனைத்துத் தேவைகளையும் நிறைவு செய்பவையாக இருக்கின்றன. சில கல்வி உதவித்தொகைகள் பற்றிய விவரங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.
ஸ்மார்ட் 2012
சிங்கப்பூர் MIT Alllaince for research and Technology(SMART) நிறுவனம் முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபடுவோருக்கு உதவித்தொகை வழங்குகிறது. Biosystems and Micromechanics, center for environmental sensing and modeling, Future Urban Mobility, Infectious diseases என்ற நான்கு துறைகளில் ஆய்வு மேற்கொள்ள,மொத்தம் நான்கு பேருக்கு வழங்கப்படுகிறது.
ஆண்டு ஊதியமாக 85 ஆயிரம் சிங்கப்பூர் டாலர்களும்(இந்திய மதிப்பில் 32 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்); ஆய்வு ஊக்கத்தொகையாக 40 ஆயிரம் டாலர்கள்; பயணப்படியாக 5,000 டாலர்கள் வழங்கப்படுகின்றன.
வரும் 2012 டிச.,க்குள் முனைவர் பட்ட ஆய்வைப் பெறுபவர்களாக இருக்க வேண்டும். வரும் டிச., இறுதி வரை விண்ணப்பிக்கலாம். ஆய்வுத்திட்ட அறிக்கை, ஆய்வேடுகள் சமர்ப்பித்திருத்தல், ஆய்வுக்கட்டுரைகள் வெளியிட்டிருத்தல் உள்ளிட்ட தகுதிகளின் அடிப்படையில் பயனாளி தேர்வு செய்யப்படுவார்.
ஹாங்காங் முனைவர் பட்ட உதவித்தொகை
ஹாங்காங் ஆய்வு மானியக்குழுவால் கடந்த 2009ல் இத்திட்டம் துவக்கப்பட்டது. ஐந்து பள்ளிகளில் 31 பாடப்பிரிவுகளில் முழு நேர முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபடுவோருக்காக இவ்வுதவித் தொகை வழங்கப்படுகிறது.
அறிவியல், பொறியியல், வணிக மேலாண்மை, மனிதவியல் மற்றும் சமூகஅறிவியல், சூழலியல் அறிவியல், உயிரிப் பொறியியல், கடல்சார் சூழலியல் அறிவியல் என்ற ஐந்து துறைசார்ந்த பள்ளிகளில் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மாதாந்திர ஊக்கத்தொகை ஒருலட்சத்து 20 ஆயிரம் ரூபாய்; பயணப்படி 60 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். மொத்தப் பயனாளிகளின் எண்ணிக்கை 135 பேர். அரசு நிதியின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனத்தில் முழுநேர முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபடுபவராக இருக்க வேண்டும். மூன்றாண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.
வரும் டிசம்பர் இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு  www.ust.hk/hkpfs/index.html என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.
ஃபெலிக்ஸ்(Felix)உதவித்தொகை
Felix  உதவித்தொகையானது ஆக்ஸ்போர்டு  பல்கலைக்கழகம் அல்லது லண்டன் ஸ்கூல் ஆப் ஓரியண்டல் அண்டு ஆப்ரிகன்  ஸ்டடிஸ்- கல்லூரியில் (SOAS) பயில்வதற்கு வழங்கப்படுகிறது. மருத்துவம் தவிர, இக்கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் அனைத்துப் படிப்புகளுக்கும் இது பொருந்தும்.
கல்வி நிறுவனத்தின் முழு கட்டணம், வாழ்வதற்கான செலவினமும், இந்தியா -பிரிட்டன் இடையேயான விமானக் கட்டணமும் படிப்பின் துவக்கத்தில் இருந்து மூன்றாண்டு நிறைவு வரைக்கும் வழங்கப்படுகிறது.
கல்வி நிறுவனத்துக்கு 20 பேர் வீதம் பயனாளிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். கடந்த ஜன., அன்று 30 வயதை நிறைவு செய்யாதவராக இருக்க வேண்டும். நிதித்தேவையை தெளிவுபடுத்த வேண்டும். முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். படிப்பை நிறைவு செய்தவுடன், தங்களின் சொந்தநாட்டுக்கு திரும்பி விடுவதை இங்கிலாந்து அரசாங்கம் எதிர்பார்க்கும்.
காமன்வெல்த் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
உயர்கல்விக்காக உதவித்தொகையை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு இதைவிட சிறந்த வாய்ப்புக் கிடைக்காது. வேறெந்த உதவித்தொகையும் இந்த அளவுக்கு செலவினங்களை உள்ளடக்கி இருக்குமா என்பதும் சந்தேகமே. சுருக்கமாகச் சொல்வதானால், எழுதும் பென்சிலில் இருந்து, உடுத்தும் ஆடை வரை; திருமணமாகி குழந்தைகள் இருப்பின் அவர்களின் செலவினத்தையும் உள்ளடக்கிய உதவித்தொகை காமன்வெல்த் உதவித்தொகையாக மட்டுமே இருக்கும்.
பிரிட்டிஷ் பேரரசின் ஆதிக்கத்தில் இருந்த நாடுகள் உட்பட 54 நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு காமன்வெல்த் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
துறைகள்
கேன்சர் தொடர்பான மருத்துவப்பயிற்சி மற்றும் ஆறுமாத ஆய்வு, இதயம், மகப்பேறு, மருந்தியல், பல்மருத்துவம், எலும்புமூட்டு, நரம்பியல், காது-மூக்கு-தொண்டை உள்ளிட்ட மருத்துவம் தொடர்பான முதுநிலை மற்றும் பிஎச்.டி., படிப்புகள்; பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், பயன்பாட்டு அறிவியல், அறிவியல், வேளாண்மை, மானுடவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட துறைகளில் ஆய்வு மற்றும் உயர்கல்வி
மேற்கொள்ளலாம்.
கல்வித்தகுதி
முதுநிலை படிப்பில் சேர இளநிலைப்பட்டம் நிறைவு செய்திருக்க வேண்டும். மானுடவியலில் குறைந்தது முதல் வகுப்பிலும்; மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பத்தில் 65 சதவீதமும் பெற்றிருக்க வேண்டும்.
பிஎச்.டி.,க்கு முதுநிலை வகுப்பில் மேற்கூறிய அளவு மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
மருந்தியல் மற்றும் பல் மருத்துவப் பயிற்சிக்கு டாக்டராகவோ, பல் மருத்துவராகவே அக்., 2002ல் இருந்து செப்., 30 2007ம் ஆண்டுக்குள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2002க்கு முன் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உதவித்தொகை சலுகையில் சிறிது வேறுபாடு உண்டு. அதுகுறித்த விவரங்களை http://bit.ly/cscuk-apply என்ற இணைய முகவரியில் பெறலாம். ஆங்கில மீடியத்தில் தங்கள் படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.
உதவித்தொகையின் விவரம்
அங்கீகரிக்கப்பட்ட கல்வி மற்றும் தேர்வுக்கட்டணம், விமானக்கட்டணம், லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் பயிலும் மாணவர்களுக்கு முதன்முறை வருகை, ஆய்வுக்கட்டுரை, உடைகள், பயணப்படி; திருமணமானவராக இருப்பின் மாதம் 220 யூரோ; கள ஆய்வுக்கு சென்றால் அதற்கான செலவுத்தொகை வழங்கப்படும்.
மொத்தம் 25 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
மேலும் விவரங்களுக்கு www.education.nic.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.
CCAPS Pre-Doctoral Dissertation Fellowship
CCAPS நிறுவனம் ஆப்ரிக்காவில் பருவநிலை மாறுபாடுகள் மற்றும் அரசியல் நிலைப்புத் தன்மை தொடர்பாக டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் பயில்பவர்களுக்கு உதவித்தொகை வழங்குகிறது. ஆப்ரிக்காவில் எங்கு, எப்படி பருவநிலை மறுபாடுகள் அச்சுறுத்துகின்றன, நிலையானவையாக இருக்கின்றன; தேர்ந்த ஆட்சிமுறைக்கான வியூகங்கள்; சர்வதேசநாடுகளின் உதவி ஆப்ரிக்க சமூகத்தில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது உள்ளிட்ட துறைகளில் ஆய்வு மேற்கொள்ளலாம்.
இளநிலை முனைவர் பட்டமாக இந்த ஆய்வை மேற்கொள்ளலாம். ஒன்பது மாதங்களுக்கான கல்வி உதவித்தொகையாக 24 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் மற்றும் ஒரு முறை சென்று, திரும்புவதற்கான விமானக்கட்டணம் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.
சமூக மற்றும் இயற்கை அறிவியல் பிரிவில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டிருப்பவராக இருத்தல் வேண்டும். வரும் பிப்ரவரி 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு http://ccaps.robertstrausscenter.org என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வுக்கால மேம்பாட்டு உதவித்தொகை
தாவரஅறிவியல் பிரிவுகளில் இளநிலை ஆய்வாளர்களை புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள ஊக்குவிக்கும் பொருட்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் இந்த உதவித்தொகையை வழங்குகிறது. முதல்கட்டமாக மூன்று ஆண்டுகளுக்கும், பல்கலையின் அனுமதியுடன் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கும் உதவித்தொகை நீட்டிக்கப்படும். ஆண்டுக்கு 40 ஆயிரம் பவுண்டுகளும், ஆய்வுக்குத் தேவையான வரையறுக்கப்படா நிதியும் வழங்கப்படும்.
தாவரவியல் துறை தொடர்பான ஆய்வகத்தில் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தனிப்பட்ட முறையில் மேற்கொண்ட ஆய்வுகள் தொடர்பான சான்றுகளைச் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களுக்கு காலக்கெடு எதுவும் இல்லை. ஆண்டுக்கு மூன்று முறை பரிசீலிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு http://www.slcu.cam.ac.uk என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.
Guest scholarship program for PhD and post-doctoral studies in sweeden
சுவீடன் பல்கலைக்கழகத்தில் அனைத்துத் துறை தொடர்பான உயர்கல்வி மற்றும் ஆய்வுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. மொத்தம் 50 பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர். முனைவர் பட்ட மாணவர்களுக்கு உதவித்தொகையாக இந்திய மதிப்பில் 85 ஆயிரத்து 554 ரூபாய் மாதந்தோறும் வழங்கப்படும். ஆய்வாளர்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சத்து 7000 ரூபாய் வழங்கப்படும். பயணப்படியாக 71 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். நோய், விபத்துக் காப்பீடு போன்றவையும் உண்டு.
ஆறு, 12, 18 மாதங்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும். முதுமுனைவர் பட்ட ஆய்வாளர்கள், பிஎச்.டி., முடித்திருக்க வேண்டும். உதவித்தொகை வழங்குவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய நாளில் இருந்து அவர் சுவீடனில் வசிப்பவராக இருக்கக் கூடாது. சுவீடன் நிரந்தரமாகத் தங்குவதற்கான உரிமை, பணி செய்வதற்கான உரிமை பெற்றிருக்கக் கூடாது. ஐரோப்பிய யூனியன் குடிமகனாக இருத்தல் கூடாது. வரும் ஜனவரி இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு www.studyinsweeden.se/scholarships/SI-scholarships/Guest-scholarship-program என்ற இணைய முகவரியைப் பார்க்கலாம்.
IPRS - ஆஸ்திரேலிய உதவித்தொகை
ஆஸ்திரேலிய அரசாங்கத்தால் இவ்வுதவித்தொகை வழங்கப்படுகிறது. அங்குள்ள பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியைத் தொடர விரும்புவோர்களுக்கு வழங்கப்படுகிறது. முழு கல்விக்கட்டணம், மருத்துவக் காப்பீடை இந்த உதவித்தொகை உள்ளடக்கி உள்ளது. இந்த உதவித்தொகைக்கு வரி எதுவும் செலுத்த வேண்டியதில்லை. இதற்கு முன், ஆஸ்திரேலிய அரசின் உதவித்தொகையை ஆறு மாதங்களுக்கு மேற்பட்டு பெற்றிருத்தல் கூடாது. இந்த உதவித்தொகையின் 75 சதவீத அளவுக்கு வேறு உதவித்தொகைகள் எதையும் கூடுதலாக பெற்றிருக்கக்கூடாது. வரும் ஜனவரியில் ஆய்வு துவங்கும். நவம்பர் இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு  www.qut.edu.au./study/fees-and-scholarships/scholarships-and-prizes/interna ional-postgraduate-research-scholarships-iprs என்ற இணையதள முகவரியைப் பார்வையிடலாம்.
Westminster International Scholarships
வளரும்நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் முழுநேரப் படிப்பாக உயர்கல்வியைத் தொடர இந்த உதவித்தொகையை இங்கிலாந்தின் University of Forward thinking வழங்குகிறது.
முழு கல்விக்கட்டணம், தங்குவதற்கான செலவினம், வாழ்வுச் செலவினம், விமானக் கட்டணத்தை இந்த உதவித்தொகை உள்ளடக்கி உள்ளது. பாடத்திட்டத்தைப் பொருத்து வழங்கும் உதவித்தொகைக்கான கால அளவு மாறுபடும்.
முதுநிலைப்படிப்புக்கான சேர்க்கை பெற்ற, வளரும் நாட்டைச் சேர்ந்த மாணவர் விண்ணப்பிக்கலாம். நவம்பர் இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.westminster.ac.uk/study/fees-and-funding/scholarships/january-2012/westminster-international-scholarships என்ற இணைய முகவரியைப் பார்வையிடலாம்.
மேலாண்மைக் கல்விக்கான புல்பிரைட் உதவித்தொகை
அமெரிக்கா- இந்திய கல்வி அறக்கட்டளை (USIEF) சார்பில் பல்வேறு உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன. அமெரிக்காவின் ஃபுல்பிரைட் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக்கழகம் Fullbrght-Nehru-CII Fellowships for Leadership in Management at US என்ற பெயரில் மேலாண்மை பயில உதவித்தொகை வழங்குகிறது. பென்சில்வேனியா மாகாணம் பிட்ஸ்பர்க்கில் அமைந்துள்ள கார்னேஜ் மெலன் பல்கலைக்கழகத்தின் டெப்பர் ஸ்கூல் ஆப் பிசினசில் பயில வேண்டும்.
உதவித்தொகை பெறும் மாணவருக்கு ஒ-1 விசா, விமானக்கட்டணம், முழு கல்விக்கட்டணம், பராமரிப்புக் கட்டணம், தகவமைத்துக் கொள்வதற்கான உதவித்தொகை, விபத்து மற்றும் மருத்துவக் காப்பீடு என அரசாங்க வழிகாட்டுதலின் படி பெரும்பான்மைச் செலவினங்களை உள்ளடக்கியதாக, இவ்வுதவித்தொகை அமையும்.
பட்டம் பெற்றிருப்பதுடன், ஐந்தாண்டு நிர்வாகப்பணி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டம். 45 அல்லது அதற்கு உட்பட்ட வயதுடையவராக, ஆரோக்கியத்துடன் இருக்கவேண்டும். விண்ணப்பிக்கும் போது இந்தியாவில் வசிப்பவராக இருக்க வேண்டும். அமெரிக்காவில் வசிப்பவராகவோ, கிரீன்கார்டு பெற்றவராகவே அதற்கு விண்ணப்பித்தவராகவோ இருக்கக்கூடாது.
இம்மாத இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.usief.org.in/scripts/ForIndianNationalsForProfessinalsFullbright-Nehru-CIIFellowshipsinManagement.aspx  என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.

No comments:

Post a Comment