Grab the widget  IWeb Gator

Friday, September 9, 2011

பெர்சனாலிட்டி


பெர்சனாலிட்டி' என அழைக்கப்படும் `ஆளுமைத் தன்மை' என்பது முக்கியமான 3 பண்புகளைக் கொண்டது. அவை-

1. உடல் சம்பந்தப்பட்ட பண்புகள் (Physical Characteristics)
2. மனம் மற்றும் நெறிப் பண்புகள் (Mental and Moral Characteristics)
3. சமூகப் பண்புகள் (Social Characteristics) ஆகியவை ஆகும்.

இந்த மூன்று பண்புகளையும் இணைத்து `பெர்சனாலிட்டி' என அழைக்கிறார்கள். உடல் சம்பந்தப்பட்ட பண்புகள் (Physical Characteristics) என்பவை ஒருவரின் உடலோடு தொடர்புடைய பண்புகளைக் குறிக்கும். குறிப்பாக ஒருவரின் முகத்தோற்றம், உடலமைப்பு, நடை உடை பாவனைகள் ஆகியவற்றை உடல் சம்பந்தப்பட்ட பண்புகள் என அழைப்பார்கள்.

மனம் மற்றும் நெறிப்பண்புகள் (Mental and Moral Characteristics) என்பது தன்னம்பிக்கை
(Self Confidence), முடிவெடுத்தல் (Determination), புத்திக்கூர்மைத்திறன் (Mental Ability), கட்டுப்பாடு (Control), உற்சாகமான மனநிலை (Enthusiasm) போன்ற பல பண்புகளை உள்ளடக்கியது ஆகும்.

சமூகப் பண்புகள் (Social Characteristics) என்பது சமூக மக்களைச் சார்ந்திருக்கத் தேவையான பண்புகள் ஆகும். குறிப்பாக நட்புணர்வு (Friendly Nature), சமுதாய இணக்கம் (Social Grace), தகவல்
தொடர்புத் திறன் (Communication Ability) ஆகியவை சமூகப் பண்புகளாகக் கருதப்படும்.


 
பெர்சனாலிட்டி”யை வளர்த்துக் கொள்வது எப்படி? 
சிவில் சர்வீசஸ் தேர்வு மற்றும் எல்லா போட்டித் தேர்வுகளிலும் இடம்பெறும் ‘நேர்முகத்தேர்வு’ (Interview) எனப்படும் “பெர்சனாலிட்டி டெஸ்ட்” என்னும் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற உதவும் ஒரு “விறுவிறு” தொடர் இது-
1.'பெர்சனாலிட்டி' எனப்படும் ஆளுமைத் தன்மை
சிவில் சர்வீசஸ் தேர்வில் 3 முக்கிய தேர்வுகள் இடம் பெறுகின்றன. அவை-
1. முதல்நிலைத் தேர்வு (Preliminary Examination)
(இனி இந்தத் தேர்வு (2011 முதல்) சிவில் சர்வீஸஸ் ஆப்டிட்யூட் டெஸ்ட் (CSAT) என அழைக்கப்படும்)
2. முதன்மைத் தேர்வு (Main Examination)
3. நேர்முகத் தேர்வு (Interview)
(இதனை ‘பெர்சனாலிட்டி டெஸ்ட்’ (Personality Test) என்றும் அழைக்கிறார்கள்)

முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வுகள் எல்லாம் எழுத்துத்தேர்வுகள் (Written Test) ஆகும். ஆனால் & ‘பெர்சனாலிட்டி டெஸ்ட்’ என்பது வாய்மொழித்தேர்வு (Oral Test) ஆகும். அதாவது நேர்முகத்தேர்வு (Interview) மூலம் இந்தத் தேர்வு நடத்தப்படும்.

நிறைய இளைஞர்கள் நேர்முகத் தேர்வு என்றால் “இதற்குத் தயாரிப்பு (Preparation) எதுவும் தேவையில்லை” என்ற எண்ணத்தோடு செயல்படுகிறார்கள். எழுத்துத் தேர்வு தயாரிப்பைப் போலவே இந்தப் பெர்சனாலிட்டி (Personality Test) தயாரிப்பும் மிக முக்கியமானதாகும்.
‘பெர்சனாலிட்டி டெஸ்ட்’ என்பதை “ஆளுமைத் தேர்வு” & என்று தமிழில் அழைப்பார்கள். யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிக்ஷன் (Union Public Service Commission) (UPSC) என்னும் அமைப்பின் கோத்தாரி குழு (Kothari Committee) சிவில் சர்வீசஸ் தேர்வில் போட்டியாளர்களின் என்னென்ன பண்புகளை ஆய்வு செய்ய வேண்டும். என்றும் எந்தெந்த பண்புகளின் அடிப்படையில் ‘நேர்முகத்தேர்வு’ என அழைக்கப்படும் ஆளுமைத் தேர்வுக்கு (Personality Test) மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்றும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. அந்த கோத்தாரி குழு குறிப்பிட்ட பண்புகள்-
1. தெளிவான முறையில் எண்ணம் மற்றும் உணர்வுகளை வெளிப்படுத்துதல் (Clarity of Expression)
2. பகுத்தாய்வு செய்யும் பண்பு (Reasoning Ability)
3. மாறுபட்ட கருத்துக்களையும் பாராட்டும் பண்பு (Appreciation of different points of View)
4. சமூக – பொருளாதார பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் இணக்கம் (Awareness and concern for Socio-economic problems)
5. மிகுந்த ஆர்வத்தோடு மக்களோடு இணைந்து செயலாற்றும் திறன் (Depth of interests relevant to interaction with people)
6. தனிப்பண்புகள் (Personal Attributes)

- ஆகியவை ஆகும்.
இந்தப் பண்புகள் (Qualities) மற்றும் திறமைகள் (Skills) போட்டியாளரிடம் இருக்கிறதா? இல்லையா? என்பதைத் தெளிவாக தெரிந்து கொள்வதற்காகவே “நேர்முகத்தேர்வு” என அழைக்கப்படும் “ஆளுமைத்தேர்வு” (Personality Test) நடத்தப்படுகிறது என்பதை சிவில் சர்வீஸஸ் தேர்வு எழுதுபவர்கள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்.
சிவில் சர்வீஸஸ் தேர்வு எழுதுபவர்கள் மட்டுமல்ல & எந்த போட்டித்தேர்வில் நேர்முகத் தேர்வு நடத்தினாலும் அது ‘பெர்சனாலிட்டி டெஸ்ட்’தான் என்பதையும் போட்டியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்த ‘பெர்சனாலிட்டி டெஸ்ட்’ மூலம் முக்கிய நிர்வாகத் திறமைத், திறமைகளான ஆழ்ந்த கவனம் (Attentiveness) முடிவுகளில் நடுவுநிலைமை (Balance of Judgement), நேர்மை (Honesty), சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள ஒருமைப்பாடு (Integrity) மற்றும் தலைமை ஏற்றல் (Leadership) ஆகியவற்றையும் தேர்வு நடத்துபவர்கள் கணித்து விடுகிறார்கள்.
சிலர் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பார்கள். கோட், சூட் அணிந்திருப்பார்கள். அழகான ஆடைகளை உடுத்தியிருப்பார்கள். காலில் ‘க்ஷ¨’ அணிந்திருப்பார்கள். சிரித்த முகத்தோடு காணப்படுவார்கள். பார்ப்பதற்கு அவர்கள் அழகாய் இருப்பதால் “இவருக்கு நல்ல பெர்சனாலிட்டி இருக்கிறது?” என்றுகூட பாராட்டுக்களைப் பெற்றிருப்பார்கள். ஆனால் - இவர்கள் சரியான ஆளா? இல்லையா? என்பதை இரண்டு நிமிடம் இவர்கள் பேசிப்பார்த்தாலே நமக்குப் புரியும்.
ஆள் அழகாக இருந்து அவரது செயல்கள் சரியாக இல்லையென்றால் அவருக்கு “நல்ல பெர்சனாலிட்டி இல்லை” - என்றே பலரும் சொல்வார்கள்.
“ஆளைப்பார்த்தால் அழகுபோல் வேலையைப்பார்த்தால் இழவுபோல” - என்பது பிரபலமான கிராமத்துப் பழமொழி உண்டு. இந்தப் பழமொழி ஒருவருக்கு ‘பெர்சனாலிட்டி’ எப்படி இருக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுகிறது.
ஒருவர் தனது பெர்சனாலிட்டி என்னும் ஆளுமைத் தன்மையை வளர்த்துக் கொள்ளாமல் - அந்தத் தேர்வில் எப்படி கலந்துகொண்டு வெற்றி பெற முடியும்?
‘நேர்முகத்தேர்வு’ என்பது ஒருவரது ‘பெர்சனாலிட்டி எனப்படும் ஆளுமைத் தன்மையை’ எடைபோடும் தேர்வு என்பதால் - தேர்வு நேரத்தில் என்னென்ன கேள்விகள் கேட்பார்கள்?” என நேர்முகத் தேர்வு கேள்விகளை சேகரித்து அதற்காக பதில்களை எழுதி மனப்பாடம் செய்வதற்குப்பதில், ‘பெர்சனாலிட்டி’ எனப்படும் ஆளுமைத் தன்மையை வளர்ப்பதற்கு இளம் வயதிலேயே பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
பெர்சனாலிட்டியை ஓரிரு நாளில் வளர்த்துக்கொள்ள முடியாது. தொடர் முயற்சியும், விடாத பயிற்சியும் இருந்தால் மட்டும் இதனை வளர்த்துக்கொள்ள முடியும்.

No comments:

Post a Comment