Grab the widget  IWeb Gator

Monday, December 5, 2011



 கம்ப்யூட்டருக்குப் புதியவரா! என்ன இருக்கிறது கம்ப்யூட்டருக்குள்?
 
     நாம் தினந்தோறும் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துகிறோம். ஆனால் பார்ப்பது எல்லாம் மானிட்டர் திரையைத்தான். உங்கள் கம்ப்யூட்டருக்குள் என்ன இருக்கிறது என்றாவது பார்த்திருக்கிறீர்களா? ஒரு சிலர் சிபியூ கேபினை மூடி வைத்த சிறிய பெட்டிக்குள் வைத்து இயக்குவார்கள். இயக்கும்போது மட்டும் அதனைத் திறந்து வைத்துக் கொள்வார்கள். எப்படி இருந்தாலும் அதன் வெளிப் புறத்தைத்தானே பார்க்கிறோம்.
சரி, கம்ப்யூட்டருக்குள் என்ன இருக்கப் போகிறது. மதர்போர்டு, ஹார்ட் டிஸ்க், டிரைவ்கள் மற்றும் இவற்றை இøணைக் கும் கேபிள்கள். இவற்றைப் பார்த்துப் பெரிதாக என்ன தெரிந்து கொள்ளப் போகிறோம். நாம் அறிந்து கொள்ள வேண்டியது எல்லாம் நம் ஹார்ட் டிஸ்க் கொள்ளளவு என்ன? சிப்பின் தன்மை என்ன? அதன் சைக்கிள் ஸ்பீட் என்ன? ராம் எவ்வளவு? இன்னும் எத்தனை போர்ட் உள்ளன? எத்தனை சாதனங்களை இணைக்கலாம்? ஓ.எஸ். எத்தனாவது பதிப்பு? அதில் சர்வீஸ் பேக் என்ன இணைந்துள்ளது? என்பவற்றை அறிந்து கொள்வதில்தான் நன்மையே உள்ளது.
அடேயப்பா எத்தனை விஷயங்கள்! இவற்றை எல்லாம் எப்படி அறிந்து கொள்வது? ஒவ்வொன்றாய் தெரிந்து கொள்ள முயற்சித்தால் நேரம் எவ்வளவு செலவாகும்? இதற்கெல்லாம் ஒரு வழி தரும் வகையில் சில சாப்ட்வேர் தொகுப்புகள் இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றில் சிறந்ததாக இரண்டு தெரிய வந்தன. அவை குறித்த தகவல்களை இங்கு காணலாம்.
முதலாவதாக CPUID என்ற நிறுவனம் தயாரித்து வழங்கும் CPUZ என்ற புரோகிராம். இது ஒரு டயாக்னஸ்டிக் புரோகிராம். அதாவது மேலே சொன்ன அனைத்து கம்ப்யூட்டர் பிரிவுகளையும் அலசி ஆராய்ந்து அதன் தன்மைகளை ஒரு டெக்ஸ்ட் பைலாகத் தரும் புரோகிராம். இதனை http://www.cpuid. com/cpuz.php என்ற தளத்தில் காணலாம். இதனை காப்பி செய்து உங்கள் கம்ப்யூட்டரில் நிறுவி இயக்கினால் கம்ப்யூட்டரில் உள்ள சிலிக்கான் பாகங்களின் இயல்பு அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம்.
CPUZ புரோகிராமினைக் காட்டிலும் கூடுதல் திறன் கொண்ட புரோகிராம் ஒன்றினைக் காண முடிந்தது. அதன் பெயர் Sandra. இதனை வழங்குவது SiSoftware என்ற நிறுவனம். இது அடிப்படையில் இலவசமாய்க் கிடைக்கிறது. ஆனால் கூடுதல் தகவல்கள் பெற கட்டணம் செலுத்திப் பெறலாம். இலவசமாய்க் கிடைக்கும் புரோகிராமே நமக்குப் போதும். இது மேலே சொன்ன CPUZ புரோகிராம் தரும் அனைத்து தகவல்களையும் தருவதுடன் கூடுதலாகச் சில தகவல்களையும் தருகிறது. கம்ப்யூட்ட ரின் பிரிவுகள் அனைத்தும் இன்னும் சிறப்பாகச் செயல்பட சில பரிந்துரை களையும் தரும். இந்த புரோகிராமினை http://www.sisoftware.net என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாகப் பெறலாம்.
எனவே கம்ப்யூட்டருக்குள் என்ன இருக்கிறது? என்ற கேள்வியைப் பார்த்தவுடன் ஸ்குரூ டிரைவரை எடுத்துக் கொண்டு இறங்கிவிட வேண்டாம். மேலே சொன்ன சாப்ட்வேர் புரோகிராம்களை இறக்கிப் பதிந்து இயக்கிவிட்டு கைகளைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்தாலே போதும்.


                       
 விண்டோஸ் 7 மீடியா பிளேயர்

விண்டோஸ் மீடியா பிளேயர், விண்டோஸ் சிஸ்டத்துடன் நமக்குத் தரப்படும் சாதனமாகும். ஆனால் இதுவரை எக்ஸ்பி சிஸ்டத்தில் நமக்குக் கிடைத்து வந்த விண்டோஸ் மீடியா பிளேய ருக்கும், தற்போது விண்டோஸ் 7 சிஸ்டத்துடன் கிடைக்கும் மீடியா பிளேயருக்கும் பல வேறுபாடுகள் உள்ளன. இதனால், எக்ஸ்பி யிலிருந்து விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறும் பலர் புதிய அமைப்பினால் தடுமாறுகிறார்கள். அதில் முக்கியமான சில இயக்கங்களை இங்குக் காணலாம்.
விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இயங்குபவர்கள், முதலில் விண்டோஸ் மீடியா பிளேயரை இயக்கவும். “recommended settings” என்ற ரேடியோ பட்டனைத் தேர்ந்தெடுக்கவும். அதன் பின்னர் “Finish” என்பதில் கிளிக் செய்திடவும். இதில் என்ற ஆப்ஷனும் கிடைக்கும். ஆனால் அது இதில் அதிகம் அனுபவப்பட்டவர்களுக்கு மட்டுமே. அடுத்து மியூசிக் பிளேயர் சில சாம்பிள் மியூசிக் பைலுடன் திறக்கப்படும். சிடி வழி பாடல் கேட்க, சிடியை அதன் ட்ரேயில் வைத்திடவும். விண்டோஸ் மியூசிக் பிளேயர் தானாகவே அதில் உள்ள இசை பைலை அடையாளம் கண்டு இசைக்கத் தொடங்கும். பின்னர், கண்ட்ரோல் பட்டன்களுடன் ஒலியின் அளவு, இயக்கும் விதம் ஆகியவற்றைக் கட்டுப் படுத்தலாம்.
அப்போது இயக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஆல்பம் அல்லது பாடலைக் காண,கீழாக வலது பக்கம் உள்ள ஐகானைக் கிளிக் செய்திட வேண்டும்.
பாடலை இயக்குகையில், சிடியை மியூசிக் பிளேயர் லைப்ரேரியில் கொண்டு செல்ல, வலது பக்கம் உள்ள சிடி அடையாளத்தில் கிளிக் செய்தால் போதும். இதில் சிறப்பு என்னவென்றால், சிடி இயக்கப்படும் போதே இதனை மேற்கொள்ளலாம். இந்த ரிப்பிங் செயல்பாடு முடிந்தவுடன், ஆல்பம் லைப்ரேரியில் பட்டியலிடப்படும்.
சிடியை உருவாக்க (“Burn”) அங்கு தரப்பட்டுள்ள “Burn” டேப்பினைத் தேர்ந்தெடுத்து, நீங்கள் விருப்பப்படும் பாடல்களை இழுத்துவிட்டால் போதும்.
  ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் முதன்மைப் பணிகள்
கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ன செய்கிறது? அதன் பணிகள் என்ன என்று நாம் அவ்வளவாகக் கண்டு கொள்வதில்லை. நாம் பயன்படுத்தும் அப்ளிகேஷன் புரோகிராம்களான, எம்.எஸ். ஆபீஸ், பேஜ்மேக்கர், கோரல் டிரா, ஆட்டோகேட் போன்றவற்றின் பணிகளையே மிகவும் உற்சாகமாகப் பேசுகிறோம். ஆனால் இவற்றிற்கு அடிப்படை யாகவும், இயக்கு வதாகவும் செயல்படுவது ஆப்பரேட்டிங் சிஸ்டமே. இது என்ன என்ன தலையாயப் பணிகளை மேற்கொள்கிறது என்று பார்க்கலாம்.
கம்ப்யூட்டரில் பல பணிகளை நிர்வாகம் (Management) செய்வது ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும். அவை
1) உள்ளீடு / வெளியீடு (Input/ Output)
2) நினைவக (Memory) மேலாண்மை
3) பணி (Task) மேலாண்மை
4) பைல் மேலாண்மை
கீபோர்டு, மானிட்டர், பிரின்டர் போன்ற ஹார்ட்வேர் உறுப்புக்களைக் கண் காணித்து அவற்றிடம் வேலை வாங்குவது ஆப்பரேட்டிங் சிஸ்டமே. எடுத்துக்காட்டாக ஒவ்வொரு தடவையும் கீபோர்டில் உள்ள கீகளை நீங்கள் அழுத்தும் பொழுது, ஆப்பரேட்டிங் சிஸ்டம் கண்காணித்து, அந்த கீகள் குறிக்கிற எழுத்துக்களை மானிட்டரில் வெளிப்படுத்துகிறது.
உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள நினைவகத்தின் அளவை அறிந்து அதைப் புத்திசாலித்தனமாக ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்திக் கொள்ளும். நினைவகத்தில் தான் தங்குவதற்கான இடம், அப்ளிகேஷன் சாப்ட்வேர்கள் தங்குவதற்கான இடம், நீங்கள் டைப் செய்கிற விவரங்களை இருந்த இடம், டிஸ்க்கிலுள்ள பைலை படிக்கும் பொழுது அதன் விவரங்களை வைக்க வேண்டிய இடம் போன்றவற்றை ஆப்பரேட்டிங் சிஸ்டமே தீர்மானிக்கிறது.
பல ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அப்ளிகேஷன்களை இயக்க முடியும். Multitask என இதை அழைப்பார்கள். இவ்வாறு பல பணிகளில் ஈடுபடும்போது ஒன்றுக்கும் மற்றொன்றுக்கும் இடையே பிணக்கு எதுவும் ஏற்படாமல், சிக்கலின்றி வழி நடத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் உதவுகிறது. ஒரு குறிப்பிட்ட பணியை இரு சிறு கூறுகளாகப் பிரித்து இரண்டு சிபியுக்களிடம் (CPU) கொடுத்து வேலையை முடிக்கவும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குத் தெரியும்.
நீங்கள் உருவாக்கும் பைல்கள், மற்றும் அப்ளிகேஷன்களுக்கான பைல்கள் போன்றவற்றை ஆப்பரேட்டிங் சிஸ்டமே பராமரிக்கிறது. பைலைச் சேமிக்க, அழிக்க, வேறிடத்துக்கு நகர்த்த, பெயர் மாற்றம் செய்ய போன்ற வேலைகளை நீங்கள் மேற்கொள்கையில் ஆப்பரேட்டிங் சிஸ்டமே அவற்றை மேற்கொள்கிறது. பைலைச் சேமிக்கும் பொழுது அதன் நேரம், தேதி ஆகியவற்றைக் குறிக்கிறது. பைலைப் படிக்க/மட்டும் (Read only), மறைக்க (Hidden), சிஸ்டம் என்ற பண்புகளை (Attributes) பைல்களுக்கு நீங்கள் கொடுக்கும் போது அவற்றை மேற்கொள்வதும் ஆப்பரேட்டிங் சிஸ்டமே. படிக்க/மட்டும் என ஒதுக்கிய பைலில் மாற்றம் செய்ய விடாமல் தடுப்பது, அதே பெயரில் வேறொரு பைலைச் சேமிக்க விடாமல் தடுப்பது எல்லாம் ஆப்ப ரேட்டிங் சிஸ்டத்தின் வேலை தான்.
 
வேர்டில் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஷார்ட் கட் கீ தொகுப்புCTRL+B: எழுத்துக்களை போல்டாக அமைக்க
CTRL+I : எழுத்துக்களை சாய்வாக அமைக்க
CTRL+U எழுத்துக்களை அடிக்கோடிட்டு அமைக்க
CTRL+DEL: கர்சரின் வலது புறம் உள்ள சொல்லை அழித்திட
CTRL+BACKSPACE: கர்சரின் இடது புறம் உள்ள சொல்லை அழித்திட
CTRL+SHIFT+SPACEBAR: இடையே உடையாத இடைவெளியை உருவாக்க
CTRL+C: தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட்டை காப்பி செய்திட
CTRL+X: தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட்டை அழித்திட
CTRL+V: தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட்டை ஒட்டிட
CTRL+ALT+V: சிறப்பான முறையில் டெக்ஸ்ட் ஒட்டிட
CTRL+SHIFT+< : எழுத்தின் அளவைக் குறைத்திட
CTRL+SHIFT+>: எழுத்தின் அளவை அதிகரிக்க
CTRL+[: எழுத்தின் அளவைக் குறைத்திட
CTRL+]: எழுத்தின் அளவை அதிகரிக்க
CTRL+HYPHEN: இடையே உடையாத ஹைபன் அமைக்க
CTRL+SPACEBAR : பாரா அல்லது கேரக்டர் பார்மட்டிங்கினை நீக்க
CTRL+SHIFT+V:பார்மட்டிங் மட்டும் ஒட்டிட
CTRL+Z: இறுதியாக மேற்கொண்ட செயலை நீக்கிட
CTRL+Y: இறுதியாக அழித்ததனை மீண்டும் கொண்டுவர
CTRL+SHIFT+G: சொல் எண்ணிச் சொல்லும் டயலாக் பாக்ஸைக் கொண்டு வர
CTRL+L: திரையின் இடது புறமாக டெக்ஸ்ட்டை ஒழுங்கு படுத்த
CTRL+E: திரையின் நடுவாக டெக்ஸ்ட்டை ஒழுங்கு படுத்த
CTRL+R: திரையின் வலது புறமாக டெக்ஸ்ட்டை ஒழுங்கு படுத்த
CTRL+M: பாரா அல்லது தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட்டினை மார்ஜினில் அமைக்க
CTRL +1: வரிகளுக்கு இடையே ஸ்பேஸ் ஒரு வரியாக அமைக்க
CTRL +5: வரிகளுக்கு இடையே ஸ்பேஸ் ஒன்றரை வரியாக அமைக்க
CTRL +2: வரிகளுக்கு இடையே ஸ்பேஸ் இரு வரிகளாக அமைக்க
F7: : ஸ்பெல்லிங் மற்றும் இலக்கண தவறுகளைச் செக் செய்து தர
SHIFT+F7: தெசாரஸ் என்னும் ஒரு சொல் போன்ற பொருள் தரும் பிற சொல் தரும் தெசாரஸ் பயன்பாட்டைப் பெற
CTRL+SPACE: ஆட்டோ கரெக்ட் பெறவும் மூடவும்



 தமிழ் டெக்ஸ்ட்டைப் படிக்க கம்யூட்டர்

தமிழில் சிறிய வாக்கியங்களை அமைத் தால், அதனைப் படித்துக் காட்டும் பயன்பாட்டு தளம் ஒன்றை, பெங்களூரு வில் இயங்கும் இந்திய பொறியியல் கழகத்தின் மொழி ஆய்வுத் துறையினர் உருவாக்கியுள்ளனர். இதனைச் சோதனை செய்திட http://mile.ee.iisc.ernet.in/tts என்ற தளம் செல்லவும். அங்கு காட்டப்பட்டுள்ள கட்டத்தில், தமிழ் யூனிகோட் எழுத்துக்களில், சிறிய வரிகளை டைப் செய்து என்டர் தட்டவும். அடுத்து, இன்னொரு தளத்திற்கு நீங்கள் எடுத்துச் செல்லப் படுவீர்கள். அங்கு உள்ள லிங்க்கில் கிளிக் செய்தால், நீங்க டைப் செய்த டெக்ஸ்ட்டைப் படித்துக் காட்டக் கூடிய சவுண்ட் பைல் கிடைக்கும். அதனைக் கிளிக் செய்தால், டெக்ஸ்ட் படித்துக் காட்டப்படும். இதில் ஒரு சில சொற்களில் மட்டுமே தவறான ஒலி கிடைக்கிறது. பெரிய வாக்கியங்களாக இல்லாமல், சிறிய வாக்கியங்கள் மிக அழகாக படிக்கப்படுகின்றன.
இந்த துறையில் இது குறித்த ஆய்வு தொடர்ந்து நடைபெறுவதால், மேலும் பல வசதிகளைச் சிறப்பாகத் தரும் அப்ளிகேஷன்களை வருங்காலத்தில் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
பார்வைத் திறன் குறைந்தவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.
 டவுண்லோட் இன்டர்நெட் பயன்பாட்டினைக் கணக்கிட 
 பிராட் பேண்ட் இன்டர்நெட் இணைப்பு இப்போது பலரிடம் வெகுவேகமாகப் பரவி வரும் பழக்க இணைப்பாக உள்ளது. இதனை வழங்கும் சேவை நிறுவனங்கள், இறக்கப்படும், ஏற்றப்படும் டேட்டா அடிப்படையில், குறிப்பிட்ட அளவு ஜிபி வரை ஒரு கட்டணம் என்றும் அதன் பின்னர், ஒவ்வொரு எம்பி டேட்டாவிற்கும் தனியாகக் கட்டணம் வாங்குகின்றனர். சில நிறுவனங்களின் திட்டங்களில் நமக்கு எப்படி இந்த அளவினை மேற்கொள்கிறார்கள் என்று காட்டப்படுவது இல்லை. இதனால், இணைய இணைப்பினைப் பயன் படுத்தினால், ஒரு மணிக்கு இவ்வளவு என, அந்த பயன்பாட்டு நேரத்திற்குமான கட்டணத்தினை மட்டும் செலுத்தும் திட்டத்தினைப் பலர் விரும்புகின்றனர். ஆனால் மணிக்கணக்கினாலான திட்டத்தினை சில நிறுவனங்கள் மட்டுமே அளித்து வருகின்றன.
எது எப்படி இருந்தாலும் நம் இணைய பயன்பாட்டினை நாம் அளந்து பார்த்து அறிய முடியாதா என்ற கேள்விக்கு விடையாகச் சில புரோகிராம்கள் இணையத்தில் உள்ளன. அவற்றில் ஒன்று BitMeter OS ஆகும். இதனை http://codebox. org.uk/bitmeterOs என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இது ஓர் ஓப்பன் சோர்ஸ் புரோகிராம். விண்டோஸ், லினக்ஸ் மற்றும் மேக் ஓ.எஸ். ஆகிய சிஸ்டங்களில் இயங்கும் வகைகளில் கிடைக்கிறது. இலவசமாய் இணையத்தில் கிடைக்கிறது.
இதனைத் தரவிறக்கம் செய்த பின்னர், ஸிப் பைலை விரித்து, பைல்களை ஒரு போல்டரில் வைத்துக் கொள்ளவும். பின்னர் அப்ளிகேஷன் பைலை இயக்கி, இந்த புரோகிராமினை இன்ஸ்டால் செய்திடவும். இன்ஸ்டால் செய்தவுடன், நமக்கு அது குறித்து ஒரு செய்தி கிடைக்கும். இதன் பின்னர், நாம் அறியாமலேயே இந்த புரோகிராம், கம்ப்யூட்டரின் பின்னணியில் இயங்கும். நீங்கள் எவ்வளவு டேட்டா அப்லோட் மற்றும் டவுண்லோட் செய்கிறீர்கள் என்ற கணக்கை எடுத்துக் கொண்டிருக்கும். இந்த டேட்டா எங்கிருந்து வந்தது என்ற தகவல் எதனையும் இந்த புரோகிராம் எடுத்துக் கொள்ளாது. எந்த நேரத்திலும், நீங்கள் இதனை இயக்கி, இதன் இணைய தளம் சென்று, உங்கள் இணையப் பயன் பாடு குறித்த தகவல்களைக் காணலாம். http://localhost:2605/ என்ற முகவரியில் உள்ள தளம் சென்று இந்த தகவல்களைக் காணலாம். இங்கு கிடைக்கும் இன்டர்பேஸில் காட்டப்படும் மானிட்டரில், அப்லோட் மற்றும் டவுண்லோட் வேகம், கிராபிகல் மற்றும் டிஜிட்டல் வடிவில் கிடைக்கின்றன. கீழாக வலது புறம் உள்ள கடிகாரத்தில் stopwatch பயன்பாட்டினை மேற்கொள்ளலாம். இதன் மூலம் குறிப்பிட்ட கால அளவில் எவ்வளவு டேட்டா பயன்படுத்தப்பட்டது என அறியலாம். History டேப்பில் கிளிக் செய்தால் நீங்கள் பயன் படுத்திய அளவினை மணி, நிமிடம், நொடி முதல் அறியலாம். டவுண்லோட் மற்றும் அப்லோட் பார் கிராப் மூலம் காட்டப்படுகிறது. Summary டேப் ஒரு மாதத்தில் நீங்கள் மேற் கொண்ட மொத்த இணைய அளவினைக் காட்டுகிறது. என்ற Query டேப்பின் மூலம், குறிப்பிட்ட கால அளவிலான டேட்டா எவ்வளவு என்று காணலாம்.
மேலே குறிப்பிட்ட அனைத்து வசதிகளைக் காட்டிலும் ஒரு சிறப்பான வசதி Alerts என்ற டேப்பில் தரப்பட்டுள்ளது. இதில் பல அளவுகளை நாம் வரையறை செய்து கொள்ளலாம். குறிப்பிட்ட டேட்டா டவுண்லோட் அல்லது அப்லோட் மேற்கொள்ளப்பட்டவுடன் நம்மை எச்சரிக்கும்படி செட் செய்திடலாம். ஒரு மாதத்தில் பயன்பாடு இவ்வளவு தான் இருக்க வேண்டும் என வரையறை செய்தால், அதற்கேற்ற வகையில் நாம் பயன்பாட்டினைக் காட்டும்.
Calculator என்ற டேப் மூலம் நாம் தரவிறக்கம் செய்திடும் பைல் இன்னும் எவ்வளவு நேரத்தில் முழுமையாக கம்ப்யூட்டரில் இறங்கும் என அறிந்து கொள்ளலாம்.
பிராட்பேண்ட் பயன்படுத்தும் அனை வரும் கட்டாயம் இன்ஸ்டால் செய்திட வேண்டிய புரோகிராம் இது.



டூப்ளிகேட் பைல்களை நீக்க


 கம்ப்யூட்டரில் பைல்களை உருவாக்குகிறோம்; இணையத்திலிருந்து தரவிறக்கம் செய் கிறோம்; மற்றவர்களிடமிருந்து பெறுகிறோம். இவை அனைத்தையும் பயன்படுத்துகையில், பல்வேறு காரணங்களுக்காக அவற்றின் நகல்களை வெவ்வேறு ட்ரைவ்களில், டைரக்டரிகளில், போல்டர்களில் பதிந்து வைக்கிறோம். சில பைல்களை, அவற்றின் பெயர்களை மட்டும் மாற்றி, ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பதிந்து வைக்கிறோம். இதனால், ஒரு பைல் பலமுறை காப்பி எடுக்கப்பட்டு, நம் கம்ப்யூட்டரில் தங்குகிறது. காலப்போக்கில், இந்த நகல்களால் ஹார்ட் டிஸ்க்கின் இடம் வீணாகிறது. தேவையற்ற முறையில் இடம் பெற்றுள்ள பைல்கள் எவை என்ற தகவலையும், அவை எங்குள்ளன என்ற விவரத்தினையும் நாம் மறந்துவிடுகிறோம். இதனால், ஒரு கட்டத்தில் இவற்றைக் கண்டறிந்து நீக்குவது நம்மால் இயலாத செயல் ஆகிவிடுகிறது.
இது போல ஒன்றுக்கு மேற்பட்ட நகல்களாகத் தங்கும் பைல்களை இனம் மற்றும் இடம் காட்ட, இணையத்தில் பல இலவச புரோகிராம்கள் கிடைக்கின்றன. இவற்றை இங்கு காணலாம்.

1. டூப்ளிகேட் கிளீனர் (Duplicate Cleaner): இந்த புரோகிராம் MD5 Hash algorithm என்ற தொழில் நுட்ப வழிமுறையினைக் கையாள் கிறது. ஒரே பைல் வேறு பெயர்களில் இருந்தாலும், இந்த புரோகிராம் கண்டறிகிறது. எனவே ஒரே மாதிரியான டேட்டா உள்ள பைல்களை, அவை எந்த பெயரில் இருந்தாலும் கண்டறிந்து காட்டுகிறது. கம்ப்யூட்டர் முழுவதும் அலசி ஆராய்ந்து, பார்மட், அளவு மற்றும் உருவாக்கப்பட்ட நாள் ஆகியவற்றின் அடிப்படையில் பட்டியலிட்டுக் காட்டுகிறது. ஒரே பாடலை MP3, WMA, M4A, M4P, OGG, APE மற்றும் FLAC என வெவ்வேறு பார்மட்களில் இருந்தாலும், அவற்றை அடையாளம் காட்டுகிறது.
எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் உருவாக்கப்படும் பைல்கள், ஆடியோ மற்றும் வீடியோ பைல்கள், போட்டோக்கள், டெக்ஸ்ட் பைல்கள் என அனைத்தையும் ஸ்கேன் செய்து காட்டுகிறது.
அதே நேரத்தில் விண்டோஸ் மற்றும் சிஸ்டம் சார்ந்த அனைத்து பைல்களையும் இது தொடுவதில்லை. அவற்றை அப்படியே காட்டுவதுடன் விட்டுவிடுகிறது. இந்த புரோகிராமுடன் எந்தவிதமான அட்வேர் அல்லது ஸ்பைவேர் இணைந்து வருவதில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக இது முழுமையாக இலவசமாகக் கிடைக்கிறது. இதனைப் பெற http://www.digitalvolcano. co.uk/content/duplicatecleaner என்ற முகவரியில் உள்ள இணையதளம் செல்லவும்.

2. டூப் டிடக்டர் (DupDetector): இந்த புரோகிராம் இமேஜ் பைல்களை மட்டும் அவை ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் இருந்தால் கண்டறிகிறது. அடிக்கடி போட்டோ எடுத்து கம்ப்யூட்டரில் வெவ்வேறு பெயர்களில் பதிந்து வைப்பவர்கள், அவற்றைக் கண்டறிந்து நீக்க இதனைப் பயன்படுத்தலாம். jpg, gif, bmp, png, tif, pcx, tga, wmf, emf, psp என பத்து வகையான பைல் பார்மட்களை இது கையாள்கிறது. இதனுடனும் எந்த விதமான மால்வேர் புரோகிராம்கள் வருவதில்லை. இதனையும் இலவசமாக இணையத்திலிருந்து பெறலாம். இதனைப் பெற http://www.prismaticsoftware.com/dupdetector/dupdetector.html என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும்.

3. அஸ்லாஜிக்ஸ் டூப்ளிகேட் பைல் பைண்டர் (Auslogics Duplicate File Finder): டாகுமெண்ட்கள், படங்கள் மற்றும் பிற அனைத்து பைல்களின் டூப்ளிகேட் நகல்களைக் கண்டறிகிறது. பெயர்களில் மட்டுமின்றி, ஒரே டேட்டாவுடனும் உள்ள பைல்களைக் காட்டுகிறது. இலவசமாகக் கிடைக்கும் இந்த புரோகிராமினைப் பெற http://www.auslogics. com/en/software/duplicatefilefinder/ என்ற முகவரியில் உள்ள தளத்தினை அணுகவும்.

4. டபுள் கில்லர் (DoubleKiller): டூப்ளிகேட் பைல்களைக் கண்டறியும் புரோகிராம் களில் வேகமாகச் செயல்படும் புரோகிராம் இது. ஒரே கம்ப்யூட்டரில் மட்டுமின்றி, நெட்வொர்க் கம்ப்யூட்டர்களிலும் இது டூப்ளிகேட் பைல்களை ஸ்கேன் செய்கிறது. பெயர், அளவு, உருவாக்கப்பட்ட நாள் வாரியாக டூப்ளிகேட் பைல்களைப் பட்டிய லிட்டுக் காட்டுகிறது. எத்தகைய பைல் களைத் தேட வேண்டாம் என பைலின் துணைப் பெயர் (*.mp3 or *.dll) கொடுத்து வரையறை செய்திடலாம். இதனை http://www.bigbangenterprises.de/en/doublekiller/ என்ற முகவரியில் உள்ள இணைய தளப் பக்கத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

5. ஈஸி டூப்ளிகேட் பைல் பைண்டர் (Easy Duplicate Finder): இந்த வகை புரோகிராம்களில் மிக வேகமாகவும், துல்லிதமாகவும் செயல்படும் புரோகிராம் இது. வேகமாகச் செயல்பட்டு, கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து டூப்ளிகேட் பைல்களையும், நாம் புரிந்து கொள்ளும் வகையில் பட்டியலிட்டு டெக்ஸ்ட் பைலாகக் காட்டுகிறது. பின்னர் அவற்றை என்ன செய்வது என்பதற்கான வழிகளையும் காட்டுகிறது. இந்த இலவச புரோகிராமினைப் பெற http://www.easyduplicatefinder.com/ என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும்.

6. பாஸ்ட் டூப்ளிகேட் பைல் பைண்டர் (Fast Duplicate File Finder): பைலின் பெயர், அளவு, நாள் மட்டுமின்றி அவற்றில் உள்ள டேட்டாவின் அடிப்படையில் டூப்ளிகேட் பைல்களை மிக வேகமாக ஸ்கேன் செய்து, டூப்ளிகேட் பைல்களின் பட்டியலைத் தருகிறது. Binary comparison algorithm என்னும் தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்துகிறது. பட்டியலிட்டு, முந்தைய நாளிட்ட பைல் களை அழிக்கலாமே என்று சுட்டிக் காட்டுகிறது. சிஸ்டம் பைல்களையும் போல்டர்களையும் இந்த தேடலில் இருந்து நீக்கி வைக்க ஆப்ஷன் தருகிறது. யு.எஸ்.பி. ட்ரைவ் மற்றும் பிற ஸ்டோரிங் மீடியாவில் உள்ள டூப்ளிகேட் பைல்களையும் கண்டறிகிறது. இதனைப் பெற http://www.mindgems.com/products/FastDuplicateFileFinder/ என்ற முகவரி யில் உள்ள தளத்தை அணுகவும்.

7. ஆல் டூப் (Alldub): டெக்ஸ்ட், மியூசிக், மூவி என அனைத்து வகையிலும் டூப்ளிகேட் பைல்களைக் கண்டறிகிறது. பைல் முதன்மை பெயர், துணைப் பெயர், பைல் அளவு, பைல் டேட்டா, இறுதியாக பைலைத் திருத்திய நாள், பைல் உருவான நாள் என பலவகை பைல் அம்சங்களின் அடிப்படையில் இது தன் தேடலை மேற்கொண்டு டூப்ளிகேட் பைல்களைக் கண்டறிந்து பட்டிய லிடுகிறது. சிடி, டிவிடி, நெட்வொர்க் டிஸ்க் ஆகிய வற்றிலும் தேடலை மேற்கொள்கிறது. இதனைப் பெற http://www.alldup.de/en_ alldup.htm என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும்.


 மால்வேர் பாதிப்பை நீக்கும் வழிகள்

உங்களுடைய கம்ப்யூட்டரை கெடுதல் விளைவிக்கும் மால்வேர் புரோகிராம்கள் பாதித்து விட்டனவா? அதற்கான அறிகுறிகள் தெரிகின்றனவா? வழக்கத்திற்கு மாறாக, கம்ப்யூட்டர் மெதுவாக இயங்குகிறதா? நிறைய பாப் அப் பெட்டிகள் கிடைக்கின்றனவா? புதுப்புது பிரச்னைகள் தலை தூக்குகின்றனவா? அப்படியானால், உங்கள் கம்ப்யூட்டரை வைரஸ், ஸ்பைவேர் அல்லது வேறு ஏதேனும் மால்வேர் புரோகிராம்கள் பாதித்திருக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இந்த பிரச்னைகள், ஹார்ட்வேரில் பிரச்னைகள் ஏற்பட்டாலும் தென்படலாம்; இருப்பினும் மால்வேர் இருக்கின்றனவா என்று சோதனை செய்து உறுதி செய்து கொள்வது நல்லது.

1. சேப் மோட்
: உங்களுடைய கம்ப்யூட்டரை இன்டர்நெட் இணைப்பி லிருந்து நீக்கவும். கம்ப்யூட்டரை சுத்தப் படுத்த நீங்கள் தயாராகும்வரை இன்டர்நெட் இணைப்பினைத் தர வேண்டாம். இதன் மூலம் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள மால்வேர், பரவுவதையும், உங்கள் தனிப்பட்ட தகவல்களை மற்றவர்களுக்கு அனுப்புவதனையும் தடுக்கலாம். உங்களுடைய கம்ப்யூட்டரில் மால்வேர் இருப்பதாக உணர்ந்தால், சேப் மோடில் (Safe Mode) பூட் செய்திடவும். இதற்கு கம்ப்யூட்டரை ஷட் டவுண் செய்து, பின்னர் எப்8 கீயின் இடம் அறியவும். பின்னர், பெர்சனல் கம்ப்யூட்டரை இயக்கி, திரையில் ஏதேனும் தென்பட்டவுடன், எப்8 கீயினைத் தட்டிக் கொண்டே இருக்கவும். இதனால், Advanced Boot Options என்ற மெனு கிடைக்கும். அதில் Safe Mode with Networking என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து என்டர் தட்டவும். சேப் மோடில் உங்கள் கம்ப்யூட்டர் இதற்கு முன் இருந்ததைக் காட்டிலும் சற்று வேகமாக இயங்கு வதனைக் காணலாம். அவ்வாறு இயங்கி னால், மால்வேர் நிச்சயம் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ளது.

2. தற்காலிக பைல் நீக்கம்: சேப் மோடில் இருந்தபடி, வைரஸ் ஸ்கேன் செய் திட நீங்கள் விரும்பலாம். அதற்கு முன்னர், தற்காலிக பைல்களை நீக்கவும். இதனால், டிஸ்க் இடம் சற்று கூடுதலாகக் கிடைக்கும்; வைரஸ் ஸ்கேனிங் வேகமாக நடைபெறும். விண்டோஸ் இயக்கத்துடன் வரும் Disk Cleanup utility என்பதைப் பயன்படுத்த, Start, All Programs (or just Programs), Accessories, System Tools, Disk Cleanu எனச் செல்லவும்.

3. மால்வேர் ஸ்கேனர் தரவிறக்கம்: ஏற்கனவே உங்கள் கம்ப்யூட்டரில் செட் செய்து வைத்திருந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராமிற்குப் பதிலாக, வேறொரு மால்வேர் ஸ்கேனிங் அல்லது எதிர்ப்பு புரோகிராமினை இயக்கவும். இதற்காக, இணையத்திலிருந்தும் இறக்கிக் கொள்ளலாம். லட்சக் கணக்கில் மால்வேர் புரோகிராம்கள் மற்றும் வைரஸ்கள் இருப்பதால், எந்த ஒரு ஆண்ட்டி வைரஸ் மற்றும் மால்வேர் எதிர்ப்பு புரோகிராம்கள் அவை அனைத்தையும் நீக்கும் என எண்ண வேண்டாம். நாம் எப்போது நாமாக இயக்குகிறோமோ, அப்போது இயங்கத் தொடங்கி, மால்வேர்களை அழிக்கும் புரோகிராம்கள் பல உள்ளன. அவற்றில் ஒன்றை தரவிறக்கம் செய்து பயன் படுத்தவும். அதனை அடுத்து, கம்ப்யூட்டரில் உள்ள ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினைப் பயன்படுத்தலாம். கீழ்க்காணும் புரோகிராம்கள் இந்த வகையில் அதிகப் பயனுள்ளவை. ஆBitDefender Free Edition, Kaspersky Virus Removal Tool, Malwarebytes, Norman Malware Cleaner, மற்றும் Super Anti Spyware.

4. மால்வேர் பைட்ஸுடன் (Malwarebytes) ஸ்கேன்: இந்தவகையில் மிகச் சிறந்த Malwarebytes புரோகிராமினை இயக்குவது நல்லது. உங்களிடம் இந்த புரோகிராம் இல்லை என்றால், http://www.malwarebytes. org/ என்ற இணைய தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இதனை கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்த பின்னர், இணைய இணைப்பினை நிறுத்திவிட்டு, ஸ்கேன் செய்திடலாம். உங்கள் கம்ப்யூட்டரில் இதனை தரவிறக்கம் செய்திட முடியாத போது, மற்றொரு கம்ப்யூட்டரின் இணைய இணைப்பில் பெற்று, இதில் இன்ஸ்டால் செய்திடலாம்.
மால்வேர் பைட்ஸ் ஸ்கேன் செய்திடுகையில் ‘Perform quick scan’ என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து இயக்கவும். அதிக பட்சம் 20 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரை இந்த ஸ்கேன் பணி செயல்படுத்தப்படும். இந்த பணி நடைபெறுகையில், இந்த ஸ்கேனர் மறைந்து பின்னர் அதனை மீண்டும் பெற இயலவில்லை என்றால், உங்கள் கம்ப்யூட்டரில் ரூட்கிட் என்ற வைரஸ் அல்லது அதனைப் போன்று செயல்படும் வைரஸ் உள்ளது என்பது உறுதி. ஏனென்றால், இந்த வகை வைரஸ்கள், எந்த ஸ்கேனரையும் இயங்கவிடாமல், அவற்றையும் முடக்கி விடும் தன்மை கொண்டன. அப்படிப்பட்ட வைரஸ் இருந்தால், உங்கள் பைல்கள் அனைத்தையும் பேக் அப் செய்த பின்னர், விண்டோஸ் இயக்கத்தை மீண்டும் ரீ இன்ஸ்டால் செய்வதே சிறந்த வழியாகும்.
மால்வேர் பைட்ஸ் வெற்றிகரமாக இயங்கி முடித்த பின்னர், பைல்களின் நிலை குறித்த அறிக்கை ஒன்று டெக்ஸ்ட் பைலாகக் கிடைக்கும். சந்தேகப்படும் படியான பைல்களையும், பாதிக்கப்பட்ட பைல்களையும் பட்டியலிட்டுக் காட்டும். இவற்றை நீக்கவா என்ற கேள்வியும் கேட்கப்படும். இவற்றை நீக்குவதே நல்லது. இவை நீக்கப்பட்டவுடன் மால்வேர் பைட்ஸ் உங்கள் கம்ப்யூட்டரை மீண்டும் இயக்குமாறு கேட்கும். ஓகே கிளிக் செய்து இயக்கவும். மால்வேர் புரோகிராம்கள் நீக்கப்பட்டு, கம்ப்யூட்டர் மறுபடியும் இயங்கத் தொடங்கியவுடன், வழக்கமான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் மூலம், கம்ப்யூட்டரின் அனைத்து ட்ரைவ்களையும் சோதனை செய்திடவும்.

5. பிரவுசரை சரி செய்க: மால்வேர் தொகுப்புகள், விண்டோஸ் சிஸ்டம் பைல்களைக் கெடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அத்துடன் நம் பிரவுசரில் மாற்றங்களை ஏற்படுத்தி, தொடர்ந்து கம்ப்யூட்டரில் இத்தகைய மால்வேர் புரோகிராம்கள் நுழைந்திட வழி வகுக்கின்றன. எனவே அடுத்த இணைய இணைப்புக்கு முன்னர், பிரவுசரின் அனைத்து செட்டிங்கு களையும் ஒருமுறை சோதனை செய்து பார்த்துவிடுவது நல்லது.

6. சிஸ்டம் பைல் சரி செய்தல்: ஒன்றும் செயல்படுத்த முடியாமல் போய், விண்டோஸ் இயக்க பைல்களை மீண்டும் பதிப்பதுதான் ஒரே வழி என்றால், அனைத்து பைல்கள், ட்ரைவர்களை பேக் அப் எடுக்க வேண்டும். இதற்கு Double Driver என்ற புரோகிராம் உதவும். உங்களிடம் ட்ரைவர் டிஸ்க்குகள் இல்லை என்றாலும், இந்த புரோகிராம் உங்களுக்கு உதவிடும்.

7. கம்ப்யூட்டரை "சுத்தமாக' வைத்திடுக: கம்ப்யூட்டரில் எப்போதும் அப்டேட் செய்யப்பட்ட ஆண்ட்டி வைரஸ் புரோ கிராம் செயல்பாட்டில் இருக்க வேண்டும். கட்டணம் செலுத்தி இதனை வாங்கி ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்க இயலாவிட்டால், இலவசமாகக் கிடைக்கும் Avast, AVG, Comodo, மற்றும் Microsoft Security Essentials போன்ற தொகுப்புகளைப் பயன்படுத்த வேண்டும்.
வழக்கமான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களுடன் OpenDNS போன்ற புரோகிராம் களைப் பயன்படுத்துவதும், மால்வேர் புரோகிராம்களிடமிருந்து கம்ப்யூட்டரைக் காப்பாற்றும். நம் பணிகளுக்கு என்றும் கம்ப்யூட்டரையே நம்பி இருப்பதால், நம் முக்கிய ஆவணங்களை அதில் மட்டுமே பல வேளைகளில் பதிந்து வைத்திருப்ப தால், கம்ப்யூட்டரை வெளித் தாக்குதல் களில் இருந்து காப்பாற்றுவது நல்லது.

No comments:

Post a Comment